Pages

Friday, July 31, 2009

சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை!

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)

Saturday, March 21, 2009

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

Sunday, January 18, 2009

தினமலர் திருந்தவில்லை.

நபிகள் நாயகத்தைக் குறித்துக் கேலிச்சித்திரம் வரைந்து தன் பாஸிச வெறியைக் கக்கிய தினமலர் பத்திரிக்கைக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தனர். முஸ்லிம்களின் எதிர்ப்பு, தினகரன் போன்ற பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களின் விமர்சனத்தால் நாறிப் போன தினமலர் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தது. சில வளைகுடா நாடுகளில் இணைய தளம் தடை செய்யப்பட்டதும் கதறி அழுது நாங்கள் ஆன்மீகம் பகுதியில் இஸ்லாம் குறித்து நல்ல செய்தி வெளியிடுகிறோம் என்று புலம்பியது. தினமலரின் புலம்பலால் மனம் இளகிய இஸ்லாமியப் பெரியவர்கள் கூட தினமலர் வெளியிடும் நல்ல செய்திகளைக் கருத்தில் கொண்டு இதனை மன்னித்து விடலாம் என்று கருத்திட்டனர். இது சாக்கடையில் தெளிந்த நீரைத் தேடும் முயற்சி என்றும் குப்பைத் தொட்டியில் உள்ள மலருக்கு எவரும் ஆசைப் படுவதில்லை, அது போல தினமலரின் ஆன்மீகச் செய்திகளை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்றும் நமது கருத்தைப் பதிவு செய்தோம். தினமலர் திருந்த வில்லை, இஸ்லாத்தைக் குறித்த தனது மோசமான மனநோயை அது அதிகப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை இன்றைய தினமலரில் அவர்கள் எடுத்துள்ள வாந்தியே போதுமான சான்றாக உள்ளது.
 

Sample text

Sample Text