மதாயின் ஸாலிஹ்
குர்ஆன் கூறும் வராலற்றுக்கு ஒரு நேரடி சாட்சி
(முகமது கால மக்கள் முகமதுவை இப்படிக் கண்டனர்! பகுதி –5 )
நபிகள் நாயகத்தின் காலத்து மக்கள் அவர்களைப் பொய்யர், குறிகாரர், சூனியக்காரர் என்றெல்லாம் தூற்றியதாகக் குர்ஆன் கூறுகிறது, எனவே நபிகள் நாயகம் அப்படிப்பட்டவர் தான் என்பதற்கு குர்ஆனின் இந்த சாட்சி ஆதாரமாகும் என்று ஒரு விசித்திரப் பதிவை கிறிஸ்தர் ஒருவர் தனது தளத்தில் பதித்திருந்தார். நபிகள் நாயகம் பொய்ப்பிக்கப் பட்டதைப் போன்று முந்தைய தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் என்ற செய்தியையும் குர்ஆன் கூறுவதோடு எந்த மக்கள் பொய்ப்பித்தார்களோ அந்த மக்களே கூட்டம் கூட்டமாக வந்து அவர்களை உண்மைப் படுத்தி இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். மட்டுமல்ல எந்த நாட்டில் அவர்கள் பொய்ப்பிக்கப் பட்டார்களோ அந்த நாடே அவர்கள் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே இஸ்லாமை ஏற்றுக் கொண்டு இன்று உலகெங்கும் கோடானு கோடி மக்களால் பின்பற்றப் படும் அளவுக்கு இக்கொள்கை மேலோங்கியுள்ளதே! ஒரு பொய்யர் அல்லது குறிகாரர் அல்லது சூனியக் காரரின் கொள்கை இந்த அளவுக்கு ஏன் மேலோங்க வேண்டும்? "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன். (58:21)